கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண்ணொருவரின் சடலம் நேற்று (14) கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் விநாயகபுரம் 6ம் குறுக்கை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயன கந்தன் தெய்வானை (லட்சுமி) (வயது – 68) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கணவனை இழந்த நிலையில் தனது மகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியாகிய சந்தர்ப்பத்திலயே நேற்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இம் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தில் கல்குடா பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் விசாரனைகளின் பின்னர் இன்று சனிக்கிழமை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. (150)

Related posts

ஊரடங்கை மீறிய 21 பேருக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

G. Pragas

உதயனின் இன்றைய செய்தித் தொகுப்பு காணொளி

Tharani

டெங்கு நோயால் பெண் உயிரிழப்பு

Tharani