செய்திகள் பிரதான செய்தி

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை?

மாத்தளை – கலேவெல பகுதியில் இன்று (01) காலை சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்று முன்தினம் காணாமல் பேயிருந்த நிலையில் இன்று அவரின் வீட்டிற்கு அண்மையிலுள்ள கால்வாய் அருகே சடலமாக மீட்கக்கப்பட்டுள்ளார்.

உறவினர்களுடன் வசித்து வரும் குறித்த சிறுவன், ஹெரோயினுக்கு அடிமையான ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், சிறுவனின் சடலத்தில், துணியைப் பயன்படுத்தி கழுத்து நெரிக்கப்பட்ட தடையங்கள் காணப்படுவதாகவும் சம்பவ இடத்தில் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கண்டாவளை பண்பாட்டு பெரு விழா!

G. Pragas

சிறப்புத் தேவையுடையோர் வாக்களிக்க உதவியாளரை அழைத்துவர அனுமதி!

Tharani

நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tharani