செய்திகள் யாழ்ப்பாணம்

சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல்; சுகாஸ் கண்டனம்!

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான றோய் டிலக்சன் வீட்டுக்குள் கடந்த (22.05.2020) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்க செயலாளரும் தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் சட்டத்தரணியுமான க.சுகாஸ் தெரிவித்தார். மேலும்,

சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கின்றது.

தொழில் ரீதியாக ஓர் சட்டத்தரணியாக தனது கடமைகளைச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொண்டு வரும் றோய் டிலக்சன் வீட்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகளின் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம்.

பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் றோய் டிலக்சனுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது. – என்றார்.

Related posts

ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம்

கதிர்

ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார விழா

Tharani

யாழ் மாநகரசபை பகுதியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை

கதிர்