in

சட்டத்துக்கு உட்பட்டு நினைவேந்துங்கள்!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

போரில் இழப்புகளைச் சந்தித்தவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு வீடுகளில் நினைவேந்தல்களைச்செய்யமுடியும். அவர்களுக்கு நான் ஆறுதல் சொல்ல விரும்புகிறேன். – என்று, பின்தங்கிய, கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதன்பின்னர், நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்படுகின்றமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பட்டதாரி பயிலுநர்களுக்கு விரைவில் நியமனம்!

வடக்கில் தொடர் மழை!