செய்திகள்யாழ்ப்பாணம்

சட்டவிரோத மது விற்பனை;ஒருவர் கைது!

அராலி மத்தியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் படையணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தபோது, 9 ஆயிரம் மில்லி லீற்றர் அரச சாராயப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.

மதுபான போத்தல்களை அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனை செய்தார் குற்றச்சாட்டில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994