செய்திகள்

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு! ஐவர் கைது!

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவ தெரேசியா தோட்ட கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 5 பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது சம்பவமானது நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் கைபற்றியுள்ளதோடு, கைது செய்யபட்டவர்கள் பொகவந்தலாவ மற்றும் பலாங்கொட பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நியூசிலாந்தை அடித்து நொருக்கி அபாரமாக வென்றது இந்தியா

G. Pragas

வாழைச்சேனை செயலாளர் பிரிவில் 531 குடும்பங்கள் பாதிப்பு

G. Pragas

இலங்கை – ரஷ்யாவிற்கு இடையில் தொடர்ந்தும் ஆயுதப் பரிமாற்றம்!

reka sivalingam