செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சட்டவிரோத வலைகள் கைப்பற்றல்; இருவர் கைது!

யாழில் உள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ் விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் இன்றைய தினம் (18) மதியம் யாழ். நகர் பகுதிகளில் உள்ள கடற்தொழில் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது ஒரு கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 30 கிலோ தங்கூசி வலையும் மற்றைய கடையில் இருந்து சுமார் 330 கிலோ தங்கூசி வலையும் மீட்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் இருவரையும் விசேட பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன், மீட்கப்பட்ட வலைகளையும் ஒப்படைத்தனர்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடை உரிமையாளர்களையும் வலைகளையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பாதுகாப்புச் செயலாளராக கமால் குணரத்ன நியமனம்

கதிர்

வவுனியாவில் தூக்கிட்ட நிலையில் பெண்ணின் சடலம்

reka sivalingam

சிம்புவின் புதிய தோற்றத்தால் குவியும் செல்பிகள்

Bavan

Leave a Comment