செய்திகள்வவுனியா

சண்டையிட்டவரை துப்பாக்கியால் சுட்ட சித்தப்பா!

வவுனியா – அரச முறிப்பில் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஆணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையின்போது அங்கு வந்த பெண்ணின் சித்தப்பாவினால் குறித்த பெண்ணின் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த நபர் மீது விறகு கட்டையினாலும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அக்கிராம மக்களினால் ஒமந்தை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,061