செய்திகள் விளையாட்டு

சதமடித்த தவான்; சென்னையை போட்டுத்தள்ளியது டெல்லி!

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 34வது போட்டி இன்று (17) சற்றுமுன் நிறைவுக்கு வந்தது. சென்னை அணியுடனான இப்போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்களினால் அதிரடி வெற்றியை பெற்றுள்ளது.

போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சென்னை அணிசார்பாக பப்டு ப்ளஸிஸ் 58, அம்பாத்தி ராயுடு 45 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். டெல்லியின் பந்துவீச்சில் அதிகபட்சம் அன்ரிச் நொர்ஜே 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 180 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 19.5வது ஓவரில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

டெல்லி அணிசார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய சிகார்த் தவான் 58 பந்துகளில் 101, ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சென்னையின் பந்துவீச்சில் தீபக் ஷாஹர் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Related posts

நான்கு பிள்ளைகளின் தாயை காணவில்லை; பொலிஸில் முறைப்பாடு!

G. Pragas

குமார் சங்கக்கார பொத்துவிலுக்கு தனிப்பட்ட விஜயம்!

Bavan

இலங்கைக்கு மருத்துவ கருவிகளை அன்பளிப்பு செய்த சீனா!

Tharani