கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல்!

மட்டக்களப்பு – சந்துருக்கொண்டான் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (09) சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 திகதி இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லிம் ஊர்க்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கற்பினித் தாய்மார், பச்சிளம் குழந்தைகள், ஆங்கவீனம் அடைந்தவர்கள் என்று 186 பொது மக்கள் அழைத்துச் சென்று படுகொலை செய்யப்பட்டனர். இதில் 5 கைக்குழந்தைகள், பத்து வயதுக்கு குறைவான 42 சிறுவர்கள், 25 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனை நினைவுகூரும் வகையில் படுகொலை நினைவுத்தூபியில் நேற்றைய தினம் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

இனவாதம் கக்கும் சிங்கள ஊடகங்கள்; ரஞ்சன் கண்டனம்

G. Pragas

அரச நிறுவன ஊழல்கள்; விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம்

G. Pragas

சுதந்திரக் கட்சியை மீட்கும் அணி உருவாக்கம்

G. Pragas

Leave a Comment