செய்திகள்

சந்திரிகாவுடன் இணைந்த உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் – தயாசிறி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்த சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ள நிலையில், அவர்கள் மற்றுமொரு கட்சிக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான ‘அப்பி ஸ்ரீ’ இயக்கத்தில் இணைந்த கட்சி அமைப்பாளர்களே கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தயாசிறி ஜயசேகர கூறினார்.

Related posts

மேன் முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நவாஸ்

G. Pragas

வீடு கட்டியது நான்; புகைப்படம் எடுத்தது இந்த அரசு – கோத்தாபய

G. Pragas

மின்சாரக் கட்டணம் செலுத்தும் காலம் நீடிப்பு!

Bavan