செய்திகள் பிரதான செய்தி

சந்தேகத்துக்குரிய சிறை அதிகாரிகள் குறித்து தீவிர விசாரணை!

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்து புலனாய்வு பிரிவினரூடாக தகவல்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி சந்தேகத்திற்கிடமான அதிகாரிகள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனரா என்பது தொடர்பில் கடுமையாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலஞ்சம் பெறுவோர் உடனடி கைது!

Tharani

கொழும்பில் இன்றும் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

G. Pragas

லசந்த விஜேரத்ன மீதான தாக்குதல்; கண்டித்து போராட்டம்

G. Pragas