செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சந்தேக நபரின் அந்தரங்க பகுதியில் ஹெரோயின் மீட்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மலவாசலில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியாலைப் பகுதியில் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் நேற்று முன் தினம் (30) முற்படுத்தப்பட்டு, 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

இந்நிலையில் சிறையில் நேற்றிரவு சந்தேக நபரை சோதனையிட்ட போது 300 மில்லிக்கிராம் ஹெரோயின் பக்கட்டுக்கள் நான்கு அவரது மலவாசலில் இருந்து மீட்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேக நபர் மயக்கமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Related posts

தேங்காய்க்கான நிர்ணய விலை?

Tharani

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!

Tharani

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது!

G. Pragas