செய்திகள் பிரதான செய்தி

சப்ரகமுவ மாகாணத்திற்கு ஆசிரியர்கள் நியமனம்?

சப்ரகமுவ மாகாணத்திற்கு 382 ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கோப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

நேற்று (20) இரத்தினபுரி சப்ரகமுவ மாகாண சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இரத்தினபுரி வலைய அதிபர்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த மாதம் 24 மற்றும் 25 திகதிகளில் இரத்தினபுரியில் அமைந்துள்ள மாகாண கேட்போர் கூடத்தில் இதற்கான நேர்காணல் நடைபெறும் எனவும், இலங்கையில் பரீட்சைத் திணைக்களத்தால் கடந்த 2019.03.31 நடாத்தப்பட்ட திறந்த போட்டித் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இதற்காக நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இராணுவ வீரருக்கு கடூழிய சிறை!

G. Pragas

பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக போராட்டம்!

G. Pragas

பலரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய இராணுவ வீரர்

G. Pragas

Leave a Comment