செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தி

சமபோஷ, யஹபோஷ, லக்போஷா மா வகைகளில் விஷம் கண்டறிவு

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற சமபோஷ, யஹபோஷ மற்றும் லக்போஷா ஆகியவற்றை உற்பத்தி செய்து விநியோகித்தமையை தொடர்பில் 4 முன்னணி நிறுவனப் பணிப்பாளர்களை நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த நிறுவனங்கள் 3 வயது வரையிலான பிள்ளைகளுக்கு பொருந்தாத வகையில் ‘போஷ’ ரக உணவில், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட எப்ளடொக்சின் அதிகமாக சேர்த்துள்ளமை இரசாயன பகுப்பாய்வு மூலம் உறுதிசெய்யப்பட்டது.

அதனையடுத்து கொத்தட்டுவ பொது சுகாதாரப் பரிசோதகர் பணிமனை குறித்த நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தது.
அதனையடுத்து வழக்கை ஆராய்ந்த நீதிவான் குறித்த நிறுவனங்களுக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282