in ,

சமிந்த வாசை விடாமல் பிடித்துக் கொண்டது கிரிக்கெட் சபை!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பு ஆலோசகராக சமிந்த வாஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஏற்கனவே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களை முன்வைத்து அண்மையில் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கட் முகாமைத்துவத்திற்கும், அவருக்கும் இடையில் குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, அவரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்ட நிலையில், சமிந்த வாஸ் தனது பதவி விலகல் கடிதத்தை மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.

வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது!

வாழைச்சேனை பிரதேச மட்ட கூட்டத்தில் சிறுவர்கள் தொடர்பில் கலந்தாய்வு!