in , ,

சமுர்த்தி அபிமானி சந்தை நிகழ்வு!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி 2021 – விற்பனை சந்தை வாழைச்சேனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இச்சந்தையில் உள்ளூர் வியாபாரிகள், சமுர்த்தி உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள், மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பிரதேச மக்களின் நன்மை கருதி சகாய விலையில் விற்பனை செய்யப்பட்டது.

சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.தேவமனோகரி தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில், பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் திட்ட மகாமையாளர் ஏ.எம்.அலி அக்பர் பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர், கணக்காளர் என பலர் பங்கேற்றனர். (150)

அரசியல் கைதியின் தாய்க்கு மிரட்டல் – பொலிஸில் முறையீடு!

கடல் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 20 பேர் கைது!