செய்திகள்பிரதான செய்திமன்னார்முல்லைத்தீவுவவுனியா

சமுர்த்தி உள்ளிட்ட அரச சலுகை பெறுவோர் விவரம் மீள திரட்டல்

சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை பெறுபவர்களின் விவரங்கள் மீள்பதிவு செய்யப்படுகின்றது என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அரச நலத்திட்ட உதவித் தொகைகளைப் பெறுவதற்கு தகுதியான நபர்களை அடையாளம் காணும் பொருட்டே மீள பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

அரசாங்கம் செயற்படுத்தும் சமுர்த்திக் கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, விசேட தேவையுடையோர் கொடுப்பனவு, சிறுநீரக நோய்க் கொடுப்பனவு, பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு ன்ற ஏதேனும் ஒரு நலத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவராயின் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தை https://wbb.gov.lk/test/en/Documents/Dowunload/Benefisary_Form_tamil.pdf எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவம் பூரணப்படுத்தப்பட்டு பின் சான்றுபடுத்தி எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது கிராம அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும் .

தற்போது அரச கொடுப்பனவுகளைப் பெறும் அனைவரும் இந்த விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டுமென சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி கேட்டுக் கொண்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282