இலங்கையில் கொரோனா தொற்றானது சமூகப் பரவல் நிலைக்கு வந்துவிட்டது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (22) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வைத்தியர் ஹரித அலுவிகார தெரிவிக்கையில்,
“நாட்டில் இதுவரை வைத்தியர்கள் 100 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் தற்போது 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்றாளிகளுடன் தொடர்புடையதாக 200 வைத்தியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் கொரோனா தொற்றானது சமூக பரவல் நிலையை எட்டிவிட்டது. அடுத்த மாத நடுப்பகுதியில் அதிகாரிக்கும் நோயாளிகளை யார் பார்ப்பது” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.