செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

சம்பந்தனை விலக்குவதற்கு தமிழரசுக்கட்சி வியூகம்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், திரு­கோ­ண­மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தனை பத­வி­க­ளில் இருந்து அகற்­று­வ­தற்­கா­கக் குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

வவு­னி­யா­வில் நடை­பெற்ற இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் மத்­திய குழுக் கூட்­டத்­தில் இந்­தக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இரா.சம்­பந்­தன் உடல் நலக்­கு­றைவு கார­ண­மாக அண்­மைக் கால­மாக செயற்­பாட்டு அர­சி­ய­லில் இருந்து ஒதுங்­கி­யி­ருக்­கும் நிலை­யி­லேயே அவரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் ஆகிட பத­வி­க­ளில் இருந்து விலக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று முன் தினம் நடை­பெற்ற மத்­தி­ய­கு­ழுக் கூட்­டத்­துக்கு வந்­தி­ருந்த திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் பல்­வேறு விட­யங்­க­ளைச் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

திரு­கோ­ண­ம­லை­யில் தற்­போது தமி­ழர் பிர­தே­சங்­க­ளும், தமி­ழர் வழி­பாட்டு இடங்­க­ளும் திட்­ட­மிட்டு பௌத்த மய­மாக்­கப்­ப­டும் நிலை­யில், அங்கு செயற்­றி­றன் மிக்க மக்­கள் பிர­தி­நிதி ஒரு­வர் தேவை என்று அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

அண்­மை­யில் திரு­கோ­ணேச்­சர ஆல­யத்­தின் காணி­க­ளைக் கைய­கப்­ப­டுத்த எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கை­களை முன்­வைத்த அவர்­கள், சம்­பவ இடத்­துக்­குச் சென்று நிலை­மை­களை ஆராய்ந்து நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கு­ரிய உடல் நலத்­து­டன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இரா.சம்­பந்­தன் இல்லை என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். இந்த நிலை­மை­யால் திட்­ட­மிட்ட ஆக்­கி­ர­மிப்பை எதிர்த்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யா­துள்­ளது என்­றும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மூப்­புக் கார­ண­மாக உடல் நிலை தளர்­வ­டைந்­துள்ள இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற அமர்­வு­க­ளில் சீரா­கக் கலந்­து­கொள்­வ­தும் நடை­மு­றைச் சாத்­தி­ய­மற்­ற­தா­க­வுள்­ளது. இது­வரை நடந்த நாடா­ளு­மன்ற அமர்­வு­க­ளில் அவர் சில­வற்­றி­லேயே கலந்து கொண்­டுள்­ளார். அத­னால் மாவட்­டத்­தின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் பேசு­வ­தற்­காக சந்­தர்ப்­பங்­க­ளும் குறைந்­துள்­ளன என்­றும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இவை தொடர்­பா­கக் ஆரா­யப்­பட்டு, இரா.சம்­பந்­த­னி­டம் பதவி வில­கு­வது தொடர்­பா­கக் கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண சபை முன்­னாள் அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் ஆகி­யோ­ரைக் கொண்ட குழுவே நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் இரா.சம்­பந்­த­னு­டன் இந்­தக் குழு­வி­னர் கலந்­து­ரை­யைாடி மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214