கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.

நேற்று (13) கோத்தாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மட்டக்களப்பிற்கு வந்த போது என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டார். கல்முனையை தரமுயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் கல்முனையை தரமுயர்த்த விடக்கூடாது என கூறும் முஸ்லிம் கட்சிகளை சஜித் பிரேமதாச அரவணைத்து வருகின்றார். இதை விட கூட்டமைப்பும் மக்களுக்கு துரோகத்தை செய்து வருகிறது. சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும். – என்றார்.

Related posts

கொரோனா நிவாரணநிதி; அள்ளிக் கொடுத்த அஜித்குமார்!

Bavan

முல்லையில் இளைஞன் சடலமாக மீட்பு!

G. Pragas

சஜித்தின் “இணைந்த மக்கள் இயக்கம்” – அங்கீகரிக்கப்பட்டது?

G. Pragas