செய்திகள்

சம்பிக்க நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார்

நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டு இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முற்படுத்தப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி முன்னாள் அமைச்சர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை இன்று வரையில் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தீ விபத்தில் ஒருவர் பலி!

G. Pragas

குடியேறாதவர்களின் காணிகளை சுவீகரியுங்கள்! போராட்டத்தில் மக்கள்!

Tharani

வேட்புமனு தாக்கல் செய்தார் சஜித்!

Bavan

Leave a Comment