செய்திகள் பிரதான செய்தி

சம்பிக்க விபத்து விவகாரம்; பொலிஸ் அதிகாரியை கைது செய்ய அறிவுறுத்து

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும உள்ள சுதத் அஸ்மடலவை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு இன்று (01) சற்றுமுன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து சம்பவத்தில் போலியான சாட்சியங்களை தயாரிப்பதற்காகவே அவரை கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

2016ல் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சம்பிக்க ரணவக்க கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இத்தேர்தல் பிழையான தலைமைத்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் – கஜா

reka sivalingam

உலருணவு பொதிகள் வழங்கல்

G. Pragas

மின்னல் தாக்கி ஒருவர் பலி!

Tharani