in , ,

சரத்குமார், ராதிகா உட்பட மூவருக்கு ஓராண்டு சிறை!

காசோலை மோசடி வழக்கில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் பிரபல தமிழ் நடிகருமான சரத்குமார், அவருடைய மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் உட்பட மூவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று (7) தீர்ப்பு வழங்கியுள்ளது.

சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றரை கோடி ரூபாயை ரேடியன்ஸ் நிறுவனத்திடம் கடனாக வாங்கி இருந்தனர். ஆனால் பணத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் திருப்பித் தரவில்லை, காசோலையும் பவுண்ஸ் ஆகியதாக ரேடியன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் இவர்கள் உடனடியாக மேற்கொண்ட மேன்முறையீட்டின்படி தண்டனையை ஒரு மாதத்திற்கு இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணிகளை தொடங்கியது யாழ் மாநகர ‘காவல்படை’

இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகள் அடங்கலாக 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை!