செய்திகள் பிராதான செய்தி வவுனியா

சரத் பாதுகாப்பு அமைச்சரானால் முள்ளிவாய்க்காலில் நடந்ததே நடக்கும் – வரதர்

“அவர் தான் எல்லாம் செய்தார் (சரத்), எல்லாத்தையும் அழித்தார் என்றால் எது உண்மை?. அத்தனை அழிவுகளுக்கும் அத்தனை சேதங்களுக்கும், தமிழ் மக்களின் சோகங்களுக்கும் காரணமானவர்கள் ஐதேகவில் இருக்கின்றனர்”

இவ்வாறு முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இன்று காலை (28) வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும்,

அவர்களது பிரதிநிதி சரத் தானே. அவரை பாதுகாப்பு அமைச்சராக்கப் போகின்றனராம். அவர் பாதுகாப்பு அமைச்சரானால் முள்ளிவாய்க்காலில் எது நடந்ததோ அது தான் நடக்கும்.

கோத்தா வந்தால் வெள்ளை வான் வரும், தமிழர்களை கொல்வான் என்பதெல்லாம் பச்சைப் பொய்.

சஜித், தான் ஜனாதிபதியாக வந்தால் அள்ளித் தருவேன், கொட்டித்தருவேன் என்கிறார். ஐயா தம்பி சஜித் நீ இப்பவும் அமைச்சர் தானே அப்பு. உன்னுடைய அரசு தானே இருக்கிறது. நீ வேண்டுமென்றால் இப்போதே அதையெல்லாம் செய்யலாம் தானே.

உன்னுடைய அமைச்சுக்கு கீழே தானே தொல்பொருள் திணைக்களம் இருக்கிறது. நீராவியடியில் நடக்கின்ற பிரச்சினைக்கு சஜித் தான பொறுப்பு. கன்னியாவில் நடக்கிற பிரச்சினைக்கு சஜித்தான் பொறுப்பு. – என்றார்.

Related posts

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இணையத் தொடராகிறு

G. Pragas

நிறைவேற்று அதிகார ஒழிப்பு பற்றி விவாதிப்பது இழிவானது

G. Pragas

அரசியலை தொடர விரும்பும் மைத்திரி

G. Pragas

Leave a Comment