செய்திகள் பிரதான செய்தி

சரஸ்வதி கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஏழாலை மேற்கு சரஸ்வதி விளையாட்டுக் கழகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் நேற்று (12) வழங்கி வைக்கப்பட்டது.

ஏழாலை மேற்கில் உள்ள சரஸ்வதி சனசமூக நிலையம் மற்றும் சரஸ்வதி விளையாட்டுக் கழக நிர்வாக அங்கத்தவர்களை அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை தலைவர் ஆகியோர் சந்தித்து சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்தினதும் பல்வேறு தேவைகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது விளையாட்டுக்கழகத்தின் உடனடி வேண்டுகோளாக விளையாட்டு உபகரணங்களின் தேவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினரால் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் சரஸ்வதி விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கப்பட்டது. இதன்போது முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேசசபைத் தலைவர் க.தர்ஷன், பிரதேச கிராம சேவகர் அ.அகிலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

கிராம மக்களின் தேவைகளை அடையாளம் காண வேண்டும்!

Tharani

தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபைப்படுத்தலாம் – சபாநாயகர்

reka sivalingam

பிரபல கூடைப்பந்து வீரர் ப்ரைனட் உட்பட 9 பேர் பலி!

reka sivalingam