ஏனையவை செய்திகள்

பெண்ணின் உயிரை காப்பாற்றிய அப்பிள்

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது. அதற்கு தகுந்தபடி இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதனங்களை தயார் செய்கிறது. அப்பிள் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய மென்பொருள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அப்பிள் கடிகாரம் மூலம் ஆபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். பல்வேறு மக்களின் உயிரை காப்பாற்றிய பெருமை கொண்ட அப்பிள் கடிகாரம் சமீபத்தில் பெண் ஒருவரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

அதன்படி கனடாவின் கல்கரி எனும் பகுதியை சேர்ச்த பெண் ஒருவர் தன்வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் மர்ம நபர் மறைந்திருப்பதை அவர் கண்டு மிகவும் பயந்து அதிர்ந்தார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்த்தும், அவர் உதவிக்கு போன் அழைக்க முயன்றார்.

ஆனால் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைப்பை மேற்கொள்ள இயலவில்லை. பின்பு அவர் அணிந்து இருந்த அப்பிள் கடிகாரம் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனதுநண்பருக்கு உடனே தெரியப்படுத்தினார்.

காவல்துறைக்கு தகவல் மேலும் அவருடைய நண்பர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார். அதிரடியாக ஆபத்தில் சிக்கிய பெண்மனி வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரிடம் இருந்து அவரை மீட்டனர்.

ஜோசப் மிசின்டோ குறிப்பாக வீட்டில் மறைந்து இருந்தவரின் பெயர் ஜோசப் மிசின்டோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு விசாரணையில் பெண்மணியை பாலியில் ரீதியில் அச்சுறுத்தும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்ததாக ஒப்புக் கொண்டார்.

போலி சாவிகள் ஜோசப் மிசின்டோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் கத்தி, கயிறு,ஆணுறை மற்றும் பல்வேறு பொருட்கள் இருந்தன என்றும், பின்பு அந்த பெணிமியின் வீட்டு நுழைவு அட்டை, போலி சாவிகள் உள்ளிட்டவையும் இருந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது

எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டார் அப்பிள் கடிகாரம் உதவியுடன் சரியான சமயத்தில் அந்த பெண்மனி எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டார். அப்பிள் நிறுவனம் மிகவும் பாதுகப்பான சாதனங்களை தயார்செய்வதற்கு அதிக கவனம் செலுத்திவருகிறது.

Related posts

தேசிய மட்ட ஈட்டி எறிதலில் வேலணை மத்திய கல்லூரி வெண்கலம்!

G. Pragas

சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்

Bavan

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 2வது நாளாக கர்தினால் சாட்சியம்

Tharani

Leave a Comment