செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

சர்வகட்சியில் அமைச்சுப் பதவிகளை கூட்டமைப்பு பெறக் கூடாது – கே.வி.தவ­ராசா

சர்வ கட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டும் சந்­தர்ப்­பத்­தில், அமைச்­சுப் பத­வி­கள் நிபந்­த­னை­யாக முன் வைக்­கப்­ப­ட­லா­காது என்­ப­து­டன், ஜனா­தி­பதி அமைச்­சுப் பத­வியை வழங்­கி­னா­லும் அத­னைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிரா­க­ரிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யும், தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் கொழும்­புக் கிளைத் தலை­வ­ரு­மான கே.வி.தவ­ராசா.

கூட்­ட­மைப்­பின் தலை­வ­ருக்கு இது தொடர்­பில் அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­து­வத்தை வகித்து வரும் நீங்­கள், தீர்க்­க­மான முடி­வொன்றை எடுக்­கும் முக்­கி­ய­மான கட்­டத்­தில் இருக்­கின்­றீர்­கள். நாடு இப்­போது எதிர்­நோக்­கி­யுள்ள அர­சி­யல் நெருக்­கடி குறித்து நீங்­கள் மிக நன்­றா­கவே அறி­வீர்­கள்.

சர்வ கட்சி அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டும் சந்­தர்ப்­பத்­தில் அமைச்­சுப் பத­வி­கள் நிபந்­த­னை­யாக முன் வைக்­கப்­ப­ட­லா­காது என்­ப­து­டன், ஜனா­தி­பதி அமைச்­சுப் பத­வியை வழங்­கி­னா­லும் அத­னைத் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரா­கிய நீங்­கள் நிரா­க­ரிக்க வேண்­டும். ஏனெ­னில் நீங்­கள் அமைச்­சுப் பத­வி­களை ஏற்­றுக்­கொள்­வீர்­க­ளா­யின் தமி­ழர் அபி­லா­சை­களை கேலிக்­குள்­ளாக்கி ,மக்­கள் இத்­தனை நாள் பட்ட துன்­பங்­க­ளை­யும் அர்ப்­ப­ணிப்­பு­க­ளை­யும் கேள்­விக்­குள்­ளாக்கி, உரி­மை­க­ளை­யும் இருப்­பை­யும் நகைப்­புக்­குள்­ளாக்­கி­வி­டும்.

எனவே இத்­த­கைய பொறுப்­பற்ற செயற்­பாட்டை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பொறுப்­புள்ள தலை­வ­ராக நீங்­கள் முன்­னெ­டுக்­க­மாட்­டீர்­கள் என நாம் வலு­வாக நம்­பு­கின்­றோம்.

உங்­க­ளு­டைய கடை­சிக் காலத்­தில் தமிழ் மக்­களை தலை­கு­னிய வைக்க மாட்­டீர்­கள் என்­றும் நாம் நம்­பு­கின்­றோம். அமைச்­ச­ர­வை­யில் அங்­கத்­து­வம் பெறும் எண்­ணம் கிஞ்­சித்­தே­னும் உங்­கள் மன­தில் இருக்­கு­மா­னால், அந்த எண்­ணத்தை உட­ன­டி­யாக மாற்­றிக் கொள்­ளு­மாறு தமிழ்த் தேசி­யத்­தின் பெய­ரா­லும் ஒட்­டு­மொத்த மக்­க­ளின் உணர்­வுச் செறி­வா­லும் ஒரு தமி­ழ­னாக உங்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்­றேன்.

இவ்­வா­றான வேண்­டு­கோளை முன்­வைப்­ப­தற்­கான கார­ணம் யாதெ­னில், தேசிய அர­சி­ய­லில் காட்­டும் தீவிர அக்­க­றையை தமிழ்த் தேசிய அர­சி­ய­லில் காட்­டா­மல் தமிழ்த் தேசிய அர­சி­ய­லைப் புறந்­தள்ளி ஓரிரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்,அமைச்­சுப் பத­வி­க­ளுக்கு ஆசைப்­ப­டு­கின்­றார்­கள் என்­பது அவர்­க­ளது அண்­மைய செயற்­பா­டு­கள் மூலம் வெளிப்­ப­டை­யா­கத் தெரி­கின்­றது. அந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தமக்கு அமைச்­சுப் பதவி தேவை என்­பதை அறி­வித்­து­விட்டு கட்­சி­யை­விட்டு வெளி­யேறி தமது ஆசை­களை நிறை­வேற்­றிக் கொள்­ளட்­டும்.

தேசிய சர்­வ­கட்சி வேலைத்­திட்­ட­மொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு சகல ஒத்­து­ழைப்­பும் வழங்­கப்­ப­டும் என ஜனா­தி­ப­திக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளீர்­கள். இந்­தப் பேச்­சுக்­க­ளின் பொழுது நீண்ட கால­மாக தீர்க்­கப்­ப­டா­ம­லி­ருக்­கும், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்ட நீக்­கம், காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதி, காணி அப­க­ரிப்­பைத் தடுத்­தல், அதி­கா­ரத்­தின் பிர­யோ­கிப்­பில் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட காணி­கள் மீட்பு, வடக்கு, கிழக்­கில் இரா­ணு­வக் கெடு­பி­டி­களை அகற்­று­தல். கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கம் என்­ப­வற்­றுக்கு விரை­வில் தீர்வு காண்­ப­து­டன் 74 வரு­டங்­க­ளா­கத் தீர்க்­கப்­ப­டாத இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான வழி­கள் தொடர்­பாக பேச்­சுக்­கள் நடத்­தப்­பட்டு தமிழ் மக்­கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­த­ரத் தீர்வு காணப்­பட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் என்ற முறை­யில் உங்­க­ளுக்கு கிடைக்­கின்ற கடை­சிச் சந்­தர்ப்­பத்தை நழு­வ­விட்­டு­வி­டா­தீர்­கள் – என்­றுள்­ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266