செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

சர்வதேச அழுத்தங்களே தீர்வைப் பெற்றுத் தரும் – நியூஸிலாந்து தூதுவரிடம் மாநகர முதல்வர்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதன் மூலமே தீர்வு கிடைக்கப்பெறும்.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன்  மற்றும் நியூஸிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று யாழ்.மாநகர சபையில் இன்று இடம்பெற்றது.

சந்திப்பின்போது உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் யாழ். மாநகரசபையின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தூதுவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

இதன்போதே யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு முன்னெடுக்கவில்லை. அத்துடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மக்கள் ஆணையுடன் புதிய அரசு அமைய வேண்டும். அதற்கு நியூசிலாந்து அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என மாநகர முதல்வர் தூதுவரிடம் வலியுறுத்தினார்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் தமிழ்மக்கள் ஏன் பங்குகொள்ளவில்லை என தூதுவர் கேள்வி எழுப்பினார்.

வெறுமனே முகங்கள் மாறுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு , அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெறவேண்டும். ராஜபக்ச அரசுக்குப் பின்  ரணில் வருவது  எமக்கான பிரச்சினைகளுக்கான  தீர்வாகக் கருதவில்லை என மாநகர முதல்வர் விளக்கினார் .

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266