செய்திகள்

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோத்தாவின் அறிவிப்பு!

சீனாவிடம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விட்டது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்சவை இந்தியாவிற்கு வருமாறு இந்தியப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்ற கோட்டாபய ராஜபக்ச, மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றிருந்தார்.

இப்பயணத்தின் போது இந்தியா, இலங்கை உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த சுற்றுப்பயணத்தின் போது பேசிய கோட்டாபய, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கியது தவறு எனவும், இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் இலங்கையில் வெளிநாட்டு செய்தியாளர்களிடம் பேசிய கோட்டாபய ராஜபக்ச, 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வணிக உடன்படிக்கையில் தனக்கு பிரச்சினை இல்லை என்றும், அந்த வணிக உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும் கருத்துரைத்திருந்தார்.

இந்தியாவிற்கு பாதுகாப்பு ரீதியில் சிக்கலை ஏற்படுத்தும் இந்த துறைமுக விவகாரத்தில் இந்தியாவில் ஒன்று பேசிவிட்டு, இலங்கை சென்று ஒன்று பேசுகிறார் என கோட்டாபய ராஜபக்ச மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் அதிகளவில் கவனம் செலுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையை மையமாக வைத்து ஆதிக்கப் போட்டியினை காய்நகர்த்தும் வல்லரசுகள் இலங்கையின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளை உண்ணிப்பாக அவதானித்துவருதாகவும் கூறப்படுகிறது.

Related posts

ஐ.தே.க எம்பிகள் சஜித்துடன் சந்திப்பு!

reka sivalingam

மருத்துவ சான்றிதழை பெற இணையம் மூலம் பதிவு

reka sivalingam

கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து போராட்டம்!

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.