in ,

சர்வமும் படைமயம்? | புதன்கிழமை | 20.01.2021 |

ஆசிரியர் தலையங்கம்

இலங்­கை­யில் 18 வய­துக்கு மேற்­பட்ட அனை­வ­ருக்­கும் இரா­ணு­வப் பயிற்சி கட்­டா­ய­மாக்­கப்­ப­டும் அபாய நிலை தோன்­றி­யுள்­ளது. “இரா­ணு­வப் பயிற்­சி­கள் மூலம் நாட்­டுப்­பற்­றுள்ள, ஒழுக்­கம் மிக்­க­தான சமூ­கத்தை உரு­வாக்க முடி­யும். சில நாடு­க­ளில் இந்­தத் திட்­டங்­கள் வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன” என்று அரச தரப்­பால் இந்த பேரா­பத்­தான திட்­டத்­துக்­குச் சப்­பைக்­கட்­டும்; கட்­டப்­பட்­டுள்­ளது.

கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யா­கப் பத­வி­யேற்ற சில நாள்­க­ளி­லேயே இந்த நாடு இரா­ணுவ மய­மாக்­க­லைச் சந்­திக்­கப்­போ­கின்­றது என்று பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்­கள் சக்தி உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் மாறி­மாறி கூக்­கு­ரல் எழுப்பி வரு­கின்­றன.

அரச நிர்­வா­கத்­துக்­குள் இரா­ணுவ முன்­னாள் அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­ப­டு­கின்­றமை, சிவில் கட்­ட­மைப்­புக்­கள் இரா­ணுவ மய­மா­கின்­றமை என ‘சர்­வ­மும் இரா­ணு­வம்’ என்ற தொனிப்­பொ­ருள் பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற வேளை­யில் அதை­நோக்­கிய பெரும் பாய்ச்­ச­லா­கத்­தான் இந்­த கட்­டாய இரா­ணு­வப் பயிற்­சியை நோக்­க­மு­டி­யும்.

தனக்­கென ஒரு வலு­வான – திட்­ட­மிட்ட – பிரத்­தி­யே­க­மான இரா­ணு­வக் கட்­ட­மைப்­பைக் கொண்­டி­ராத நாடு­கள், ஆயுத ரீதி­யி­லான தயார்ப்­ப­டுத்­த­லுக்­காக இந்­தக் கட்­டாய இரா­ணு­வப் பயிற்­சியை வழங்­கு­கின்­றமை இது­வ­ரை­யி­லான நடை­முறை. இந்­தக் கட்­டாய இரா­ணு­வப் பயிற்­சி­யின் மூலம் சுழற்சி முறை­யி­லான இரா­ணு­வக் கட்­ட­மைப்பை அவை வலுப்­ப­டுத்­து­கின்­றன.

அத்­தோடு அந்த நாடு­கள் அமை­திக்­கும், சுமு­க­மான வாழ்­வி­ய­லுக்­கும் பெயர் போனவை. உதா­ர­ண­மாக சுவிஸ், நோர்வே போன்­ற­வற்­றைச் சொல்­ல­லாம்,. ஆனால், இலங்­கை­யின் நிலைமை அவ்­வா­றல்ல. இலங்­கை­யில் இரா­ணு­வக் கட்­ட­மைப்பு வலு­வா­க­வும், நிரந்­த­ர­மா­க­வும் உள்­ளது. ஒவ்­வொரு வரு­ட­மும் பட்­ஜெட்­டில் அதி­க­ளவு தொகை ஒதுக்­கப்­ப­டும் துறை­யா­க­வும் பாது­காப்­புக் கட்­ட­மைப்பே விளங்­கு­கின்­றது.

ஒவ்­வொரு வரு­ட­மும் இலங்­கை­யில் இரா­ணு­வத்­தின் வலு­வும், ஆளணி­யும் அதி­க­ரித்­த­ப­டியே இருக்­கும் சூழ­லில், அரச தரப்­பி­ன­ரின் ‘கட்­டாய இரா­ணு­வப் பயிற்சி’ என்ற இந்­தத் திட்­டம் மிகப்­பெ­ரும் எதிர்­மறை எண்­ணமே தவிர வேறொன்­று­மில்லை.

பலஸ்­தீ­னத்தை ஆக்­கி­ர­மித்து ஒரு­நா­டாக தன்னை நிலை­நிறுத்­தி­யுள்ள இஸ்­ரே­லில் 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு இரா­ணு­வப் பயிற்சி என்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது. 2035ஆம் ஆண்­டுக்­குள் இஸ்­ரேல் என்­ற­தொரு நாட்டை இல்­லா­மல் செய்­ய­வேண்­டும் என்று நாடா­ளு­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்றி கங்­க­ணம் கட்­டி­யுள்ள ஈரான் மற்­றும் துருக்கி, சிரியா போன்ற மத்­திய கிழக்­கின் பெரும் எதி­ரி­க­ளுக்கு மத்­தி­யில் நாட்­டின் அனைத்து மக்­க­ளும் போரா­ளி­க­ளாக இருந்­தால் மட்­டுமே தன் நாட்­டுக்கு இருப்பு என்­பது உள்­ளது என்ற அடிப்­ப­டை­யில் இஸ்­ரே­லில் இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஒரு­வ­கை­யில் அது ஏற்­கக்­கூ­டி­ய­தும்­தான். ஆனால், இலங்­கைக்கு இந்­தத் திட்­டத்­தின் அவ­சி­யம் ஏன் என்­பதை அரச தரப்­பி­னர் தெட்­டத்­தெ­ளி­வா­கப் புரி­ய­வைக்க வேண்­டும்.

இரா­ணு­வப் பயிற்­சி­யின்­போது ஆயு­தக் கையாள்கை தொடர்­பி­லும் பயிற்­று­விக்­கப்­ப­ட­லாம். இது நாட்­டுக்­குள் பல சட்­ட­வி­ரோத ஆயு­தக்­கு­ழுக்­கள் மற்­றும் கிளர்ச்­சிக் குழுக்­கள் என்­ப­ன­வும் தோற்­றம்­பெ­றக் கார­ண­மாகி விட­லாம்.

இந்­தப் பேரா­பத்­தைத் தவிர்ப்­ப­தற்­காக சில­வே­ளை­க­ளில் ஓர் இனத்­துக்கு மட்­டும் இரா­ணு­வப் பயிற்­சி­யும் வழங்­கப்­ப­ட­லாம். அது எல்­லா­வற்­றை­யும் விட மேலான பேரா­பத்­தாக வந்­து­மு­டி­யும். ஆக, எவ்­வாறு பார்த்­தா­லும் ‘கட்­டாய இரா­ணு­வப் பயிற்சி’ என்­பது இலங்­கைக்­குத் தேவை­யற்­ற­தொன்று.

பல்­லின மக்­க­ளும் சுதந்­தி­ர­மாக, ஒற்­று­மை­யாக வாழ­வேண்­டும் என்ற எண்­ணத்­தில் இந்த அரசு இத­ய­சுத்­தி­யு­டன் இருந்­தால், கட்­டா­யப் பயிற்­சி­களை வழங்­கட்­டும். ஆனால், அது இரா­ணு­வத் துறை­யி­லாக அல்­லா­மல் விவ­சா­யத் துறை­யி­லாக அமை­யட்­டும். இந்­தக் கட்­டாய விவ­சா­யப் பயிற்சி, தற்­சார்­புப் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்தி நாட்டை கட­னில் இருந்து மீட்­டு­வ­ர­வா­வது உத­வும். புரி­யட்­டும் – தெளி­யட்­டும்.

வவுனியாவில் 20 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி!!

மாற்­று­வ­ழி­களே தேவை!!! |வெள்ளிக்கிழமை|22.01.2021|