சினிமா செய்திகள்

சாதியம் பேசும் திரௌபதி படத்தின் ட்ரெய்லர்

மிழ் நாட்டில் விரைவில் வெளியாக உள்ள திரௌபதி என்ற படத்தின் முன்னோட்ட காட்சியில், சாதிகடந்து காதல் திருமணம் செய்து வைக்கும் தலைவர்களை கடுமையாக விமர்சித்து இருப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் புகார் கூறி உள்ளார்.

பாரதிராஜாவின் வேதம் புதிது, இது நம்ம ஆளு, கமல்ஹாசனின் சண்டியர், விஸ்வரூபம், ரஞ்சித்தின் கபாலி, முத்தையாவின் கொம்பன், மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் வரிசையில் மோகன் ஜி என்ற இளம் இயக்குனரின் திரௌபதி என்ற படைப்பு வெளியாவதற்கு முன்னதாகவே பெரும் எதிர்பார்ப்பையும், பலத்த எதிர்ப்புகளையும் சந்திக்க தொடங்கி இருக்கிறது!

சாதி கடந்து காதல் செய்ய சில தலைவர்கள் தூண்டுவதாக, படத்தின் முன்னோட்டக் காட்சியில் இடம் பெற்றுள்ள வசனமே இவ்வாறான எதிர்ப்புகளுக்கு காரணமாகும்.

Related posts

நீர்க்கட்டணம் தொடர்பான அறிவித்தல்!

Tharani

பலரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய இராணுவ வீரர்

G. Pragas

சீனாவில் இதுவரை 1600 பேர் பலி!

G. Pragas