கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

சாய்ந்தமருதில் பிரதேச சபை உருவாகும்! மக்களிடையில் மஹிந்த உறுதி

எமது ஆட்சியில் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரமொன்று சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் கூட்டம் இன்று (25) இடம்பெற்றது.

இதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

கல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும். தற்போது கடலில் காணப்படுகின்ற படகுகள் இங்கு இருக்க வேண்டியவை அல்ல. இவைகள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட வேண்டியவை. அதற்கு நிச்சயமாக துறைமுகத்தை அமைத்து தருவேன். மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். சாய்ந்தமருது மக்கள் விரும்பும் பிரதேச சபையை அமைத்து தருவேன். நகர சபையாகவும் மாற்றி தருவேன்.

பயங்கரவாத பிடியில் இருந்து உங்களை பாதுகாத்து பள்ளிவாசல் வீடுகளில் முடங்கி இருந்தவர்களை வெளியில் கொண்டுவந்தவர்கள் நாங்கள். ஆனால் இந்த முஸ்லீம்களுக்கான தொழுகையை கூட முடங்கியது இந்த ஆட்சியில் தான். உயிர்த்த ஞாயிறன்று குறித்து ஒரு தேவாலயத்தில் குண்டுவெடிக்க போகின்றது என்று தெரிந்தும் கூட ஒரு அமைச்சரின் தந்தை தன் மகனை தேவாலயத்திற்கு செல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார். தானும் செல்லவில்லை. ஆனால் தாக்குதலில் அப்பாவி 400 மக்கள் உயிரிழந்தார்கள். அந்த அமைச்சரும் குடும்பமும் பாதுகாக்கப்பட்டது. அந்த அமைச்சர் வேற யாரும் அல்ல. இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வலது கை ஊடக பேச்சாளர் ஆவார் மேலும் குண்டு வெடிக்கும் என்று தெரிந்தும் நித்திரை செய்த இந்த அரசாங்கம் தான் இத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

தொடர்ந்தும் எங்கள் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பேருவளை தாக்குதலின் போது ஜனாதிபதியான நானும் பாதுகாப்பு செயலாளரும் அன்றைய தினம் நாட்டில் இல்லாமல் இருந்தோம். இருந்த போதிலும் சம்பவம் அறிந்து உடனே நாடு திரும்பி இரவோடு இரவாக உணவு உண்ணாமல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். ஆனால் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தான் நித்திரை கொள்ளாமல் நாட்டை பாதுகாப்பேன் என்று சொல்கின்றார். இவர் நித்திரை செய்கின்றாரா இல்லையா என்று நாங்கள் பார்க்கவா முடியும். ஆனவே தான் எங்களுக்கு எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் உங்களுடைய பரிபூரண ஆதரவை தாருங்கள் – என்றார்.

Related posts

தேரர்களின் அராஜகத்தை கண்டித்து நாளை போராட்டம்!

G. Pragas

ஞானசார தேரர் காவியை கழற்றிவிட்டு சண்டித்தனம் செய்யட்டும் – செல்வம்

G. Pragas

சூழல் நட்புறவு நிறுவனமாக நிலை நிறுத்திய Singer Sri Lanka PLC நிறுவனம்

G. Pragas

Leave a Comment