போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய நால்வருக்கு ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை போக்குவரத்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்றுமுன்தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சாரதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
இதேவேளை சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவருக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.