செய்திகள்

சார்க் பிராந்தியங்கள்- வர்த்தகம் தொடர்பு நடவடிக்கை

சார்க் உறுப்பு நாடுகளுக்கிடையில், அதன் பாதுகாப்பிற்குப் பங்கமில்லாதவாறு, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கோரியுள்ளார். டிசம்பர் 10 ஆம் திகதி, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற, இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் சார்க் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 35 ஆவது சார்க் பட்டய தினத்தைக் குறிக்கும் நிகழ்வொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உலக சனத்தொகையில் 20% இற்கும் அதிகமான பங்கை வகிக்கும் தெற்காசியாவின் பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தக எண்ணிக்கையானது தற்சமயம் 6% இற்கும் கீழாக வீழ்ச்சியடைந்துள்ளமையானது திருப்தியளிக்கவில்லையென்றும் அது பற்றியதில் கவனஞ்செலுத்தப்படவேண்டுமென்றும் அமைச்சர் குணவர்த்தன குறிப்பிட்டார்.

‘ஆசியான்’ உடன் ‘சார்க்’ ஐ ஒப்பிட்ட அமைச்சர், உலக சனத்தொகையில் 9% இற்கும் குறைவான பங்கை வகிக்கும் ‘ஆசியான்’ பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தக எண்ணிக்கை 22% இற்கும் அதிகமாகவுள்ளதெனச் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக விரிவாக்கத்தில் சார்க் பிராந்தியத்தின் பலமான கொள்கைக் கட்டமைப்பினை இனங்கண்ட அமைச்சர், இப்பிராந்தியத்திலுள்ள இலங்கை உட்பட்ட சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நெகிழ்வுத்தன்மை வேண்டுமெனக் கோரினார். அத்துடன் அவர், இப்பிராந்தியம் முகங்கொடுக்கும் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் சீரற்ற காலநிலைகள் போன்ற சுற்றாடல் சவால்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பட்டய தின நிகழ்வில், கொழும்பிலுள்ள சார்க் இராஜதந்திர தூதுவர்கள் மற்றும் வணிக சமுதாயத்தினரும் பங்கேற்றனர்.

Related posts

தொலைபேசி கடை உடைப்பு; நால்வர் கைது

reka sivalingam

பூஜித – ஹேமசிறிக்கு மறியல் நீடிப்பு!

reka sivalingam

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு?

reka sivalingam