செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சாவகச்சேரியில் காெள்ளை; தம்பதியினர் படுகாயம்!

ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சாவகச்சேரி – மண்டுவில் பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன் – மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த தம்பதியினர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

reka sivalingam

மட்டுவில் சில பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

reka sivalingam

வட, கிழக்கில் மழையுடனான காலநிலை அதிகரிப்பு!

Tharani