செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

சாவகச்சேரி சட்டத்தரணிக்கு தொற்றில்லை – தனிமைப்படுத்தல் தொடரும்!

வவுனியா – நெடுங்கேணியில் தனிமை மையத்தில் சாவகச்சேரி – சரசாலையைச் சேர்ந்த பொறியியலாளருக்கு காெரோனா தாெற்று நேற்று (24) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது மனைவியான சட்டத்தரணியிடம் முன்னெடுக்கப்பட்ட கொரோனா (பிசிஆர்) பரிசோதனையில் அவருக்கு தாெற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது.

எனினும் குறித்த சட்டத்தரணி தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளதுடன், 14 நாள்களில் அவரிடம் இரண்டாவது தடவை பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை அவர் யாழ். மாவட்ட நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன் முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கு கடந்த செவ்வாய், புதன்கிழமை சென்று உள்ளார். அத்துடன், சாவகச்சேரி நீதிமன்றுக்கும் அவர் சென்றுள்ளார்.

Related posts

பூஜித் – ஹேமசிறிக்கு விளக்கமறியல் நீடிப்பு

reka sivalingam

2019ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் நாளை கையொப்பம்

Tharani

காஞ்சரம்குடாவில் 24 கைக் குண்டுகள் மீட்பு!

reka sivalingam