செய்திகள் பிரதான செய்தி

சாவகச்சேரி தவிசாளரின் வாக்கு பிறிதொரு நபரால் அளிக்கப்பட்டதால் குழப்பம்!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதனின் கணவர் இராமநாதன், சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்கு வாக்களிக்கச் சென்றிருந்தார்.

இதன்போது அங்கு, அவர் ஏற்கனவே வாக்களித்தாக பதிவாகியிருப்பதாக கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் இவ்விடயம் தொடர்பாக தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், உதவி தேர்தல் ஆணையாளரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாலியல் குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகர் கைது

G. Pragas

புலிகளின் ஆயுதம் தேடி கோம்பாவிலில் அகழ்வு

G. Pragas

நீதித்துறையின் அரசியல் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது! – ஜனாதிபதி

G. Pragas