in ,

சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது!

சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று நிறைவேறியது.

தவிசாளர் சிவமங்கை இராமநாதன் தலைமையில் 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

18 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகரசபையில் இன்றைய தினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் சபைக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

தவிசாளரால் வரவுசெலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சபையில் பிரசன்னமாகி இருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவோடு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

நேர்முகத்தேர்வு!

மீண்டும் வெடித்தது எரிவாயு சிலிண்டர்!