in ,

சிஐடிக்கு தொற்றியது சமூக பரவல் இல்லையா – பவித்ராவிடம் கேட்ட சஜித்

நாடாளுமன்ற பொலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது ருவிட்டரில் அவர் இன்று (25) காலை தமிழில் பதிவிட்டுள்ளார். அதில்,

“நாடாளுமன்றத்தின் பொலிஸ் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், கொரோனா இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கூறிவருகின்றமை உண்மைக்கு புறம்பாகத்தானே உள்ளது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

20ம் திருத்தம் – கார்டூன் கதை

நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற மானம்பூ திருவிழா!