செய்திகள் பிரதான செய்தி

சிஐடி – ரிஐடி பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

குற்ற புலனாய்வு பிரிவின் (சிஐடி) பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஏ.ஆர்.பீ.ஜே.அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி குற்ற புலனாய்வு பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ.திலகரத்ன அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் (ரிஐடி) புதிய பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டி.ஜி.என்.டபிள்யூ.டி தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் கடமையாற்றிய மேல் மாகாண புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பதவிக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி எச்.பீ.ஏ.புஸ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கே.ஜி.எல்.கீதால் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் நுகேகொட பகுதிக்கு பொறுப்பானவராக கடமையாற்றினார்.

அமைச்சர்களின் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ.எச்.பி அஜித் ஹெசிறி பொலிஸ் கல்லூரியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு நேற்று (22) இடமாற்றம் வழங்கி உடன் அமுலாகும் வகையில் இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பேருந்து விபத்து; கடற்படை அதிகாரிகள் காயம்!

G. Pragas

மஹிந்தானந்த வழக்கு ஒத்திவைப்பு

reka sivalingam

யாழ் இந்துக் கல்லூரியில் நாவலர் விழா!

Bavan