செய்திகள் விளையாட்டு

சிக்ஸ்ஸர்களினால் அடித்து நொருக்கிய ஸ்கொட்லாந்து வீரர்

நெதர்லாந்து அணிக்கு எதிரான ரி-20 போட்டியில் ஸ்கொட்லாந்து அணி வீரர் ஜோர்ஜ் முன்சி 56 பந்துகளில் 14 சிக்ஸர், 5 பவுண்டரிகள் அடங்கலாக 127 ஓட்டங்களை விளாசித் தள்ளியிருக்கிறார். அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-20 போட்டித் தொடர் அயர்லாந்தில் கடந்த 09ம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இதில் நேற்று இடம்பெற்ற அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டமொன்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோர்ஜ் முன்சியும் அந்த அணித் தலைவர் கைல் கோட்ஸ்ஸும் களமிறங்கினர்.

நெதர்லாந்து அணியின் பந்து வீச்சுக்களில் இருவரும் சிக்ஸர் மழை பொழிய அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் கோயட்ஸ் மொத்தமாக 50 பந்துகளில் 5 சிக்ஸர், 11 நான்கு ஓட்டம் அடங்கலாக 89 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பெரிங்டன் தன் பங்குக்கு 16 பந்துகளில் 22 ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்களை குவித்தது. இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான முன்சி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 பந்துகளில் சதமடித்தது மாத்திரம் அல்லாது, மொத்தமாக 56 பந்துகளை எதிர்கொண்டு 14 சிக்ஸர்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 127 ஓட்டங்களை குவித்தார்.

இதன் மூலம் சர்வதேச இருபதுக்கு – 20 போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆப்கானின் வீரர் ஹஸத் துல்லா ஸசாய் 16 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 2 ஆவது இடத்தில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பின்ச் 14 சிக்ஸர்களுடன் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 56 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியிருந்தது.

Related posts

யாழில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

G. Pragas

சிறுமியுடன் ஒன்றாக இருந்த இளைஞன் உட்பட இருவருக்கு மறியல்

G. Pragas

சுமந்திரனுக்கு பொம்மை வைத்து செருப்பணிவிப்பு!

G. Pragas