செய்திகள் விளையாட்டு

சிக்ஸ்ஸர்களினால் சிதறடித்த வில்லியர்ஸ்; அபாரமாக வென்றது பெங்களூர்!

ஐ.பி.எல் ரி-20 தொடரின் 33வது போட்டி இன்று (17) சற்றுமுன் நிறைவுக்கு வந்தது. ராஜஸ்தான் அணியுடனான இந்தப் போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அபாரமாக 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக ஸ்டீவ் ஸ்மித் 57, ரொபின் உத்தப்பா 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பெங்களூரின் பந்துவீச்சில், அதிகபட்சம் கிரிஸ் மொரிஸ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 178 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 19.4வது ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

அணிசார்பில் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய ஏ.வி.டி. வில்லயர்ஸ் ஆறு சிக்ஸ்ஸர்களுடன் 22 பந்தில் 55 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

ராஜஸ்தானின் பந்துவீச்சில் ராகுல் தேவதிய, ஸ்ரேஸ் கோபால், கார்திக் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Related posts

பெருமளவு ஹெரோயின் – ஆயுதங்களுடன் மூவர் கைது!

G. Pragas

நல்லிணக்க இலங்கையை ஆதரிப்போம் – கனேடிய உயர்ஸ்தானிகர்

G. Pragas

அரச – தனியர் துறை செயற்பாடுகள் நாளை ஆரம்பம் – அறிவிப்பு!

G. Pragas