செய்திகள் பிராதான செய்தி

சிங்களம் – தமிழில் உரையாட அனுமதிக்க வேண்டும் – அநுர

ஆஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக அரச நிறுவனங்களில் சிங்கள அல்லது தமிழில் உரையாட மக்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

தேசிய பாதுகாப்புக்கு தற்போது உள்ள ஒரே அச்சுறுத்தலாக தீவிரவாதம் காணப்படுகின்றது. இதனை கருவியாக வைத்து கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் செயற்படுகிறது. எனவே தீவிரவாதத்தை தோற்கடிக்க அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சிகள் போதுமானதாக இருக்கும்.

அத்தோடு அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்காமல் நம் நாட்டினை முன்னேற்ற முடியாது. எனது ஆட்சியின் கீழ் எந்தவொரு சமூகத்திலும் தீவிரவாதம் தோன்ற அனுமதிக்க மாட்டேன். மாறுபட்ட கலாச்சாரங்கள் இருப்பதால் எமது நாடு அழகுபடுத்தப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய பெண்களை அங்கீகரிக்க கடந்த அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் தவறிவிட்டது. பெண்கள்தான் ஆடை மற்றும் தோட்டத் துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுகிறாரர்கள். அவர்களினாலேயே நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது – என்றார்.

Related posts

திருமலையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை!

G. Pragas

ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற மலையக இளைஞன்

Tharani

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை பொலிஸாருக்கு வழங்கியவருக்கு பணப்பரிசு

கதிர்

Leave a Comment