in , ,

‘சின்னக்கலைவாணர்’ விவேக் மரணம்!

சின்னக்கலைவாணர் என பெயர் பெற்ற பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை 59 வயதில் காலமானார்.

நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் காலமானார்.

மாரடைப்பு ஏற்பட்ட விவேக்கின் இதயத்தில் 100% அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விவேக் நகைச்சுவை நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ரசிகர்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகம் விதைப்பவர். சினிமாவில் நடிப்பது தவிர மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார் விவேக்.

250 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் பட்மஸ்ரீ உட்பட சர்வதேச விருதுகளையும் வென்றுள்ள சிறந்த நகைச்சுவை நடிகராவார்.

நீராவிப்பிட்டியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!

தண்ணீர் மீட்டர் கருவிகள் திருட்டு – பிரதேச சபை தலைவர் கைது!