இந்திய சின்னத்தியை நடிகையான பண்டியன் ஸ்ரோர்ஸ் புகழ் சித்ரா காமராஜ் (28-வயது) இன்று (09) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளினியான இவர் பல்வேறு நாடகங்களில் நாயகியாக நடித்துள்ளார். அண்மையில் இவருக்கு சென்னையை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.