சிம்புவின் கார் மோதி முதியவர் சாவு

சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் சிம்புவின் கார் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் காரை ஓட்டிச் சென்ற சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி வீதியைக் கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதியினர் முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரச மருத்துவமனையில் சேர்த்தனர்.

எனினும் முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளாக்கிய கார் நடிகர் சிம்புவின் கார் என்றும் சம்பவம் நடந்த அன்று சிம்புவின் காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்திரன் தனது குடும்பத்தினருக்கு சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அந்தக் காரை செலுத்திச் சென்ற சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version