சினிமா செய்திகள்

சிம்மசொப்பன கதாபாத்திரம் “அப்பு” கமல்; யாராலும் முடியாத 31 வருடகால சாதனை!

யாருமே றீமேக் செய்ய அஞ்சும்படியான ஒரு படத்தைப் பற்றித்தான் இந்த கட்டுரை பேசப்போகிறது. அதுதான் இன்றைக்கு 31 வருடங்களுக்கு முன்னால் வெளியான கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம்.

பொதுவாக இந்திய சினிமாவில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பிற மொழியினர், தங்கள் மொழியில் றீமேக் செய்வார்கள். ஆனால், சிலரின் வெற்றி பெற்ற படங்களைத்தான் மற்றவர்கள் றீமேக் செய்ய அஞ்சுவார்கள். அதில் முக்கியமானவர் கமல்ஹாசன்.

அவரின் பெரிய வெற்றிப்படங்களை றீமேக் செய்யப் பலரும் தயங்குவர், ஏனென்றால் தன் நடிப்பின் மூலம் படத்தை இன்னொரு தளத்திற்குக் கொண்டு சென்றிருப்பார் கமல்ஹாசன். நாயகன் படத்தை `தயாவன்’ என ஹிந்தியில் றீமேக் செய்து வினோத் கன்னா பட்ட பாடு இதற்கு ஒரு உதாரணம்.

`நாயகன்’ திரைப்படம் வெளியாகி, அனைவரின் பாராட்டைப் பெற்ற பின்னர், கமல்ஹாசனுக்கு ஒரு சுமை ஏறியது. அவருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில் நாயகனுக்கு அடுத்த கமலின் சொந்தப்படம் `அபூர்வ சகோதரர்கள்’ என்று அறிவிப்பு வெளியானது. இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவின் இயக்கத்தில், கமலின் இரட்டை வேடத்தில், இளையராஜாவின் தெவிட்டாத இசையில் இந்தப் படம் வெளியாகி அபார வெற்றி பெற்றது.இந்தப் படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதனை றீமேக் செய்ய யாரும் முன்வராமைக்கான காரணம், இந்தப் படத்தில் வருகின்ற கமலின் “அப்பு” எனும் கதாபாத்திரம் ஆகும்.

ஆம்,அந்தக் கதாபாத்திரத்தை எவ்வாறு வடிவமைத்தார்கள், அதில் கமல் குள்ளனாக எவ்வாறு நடித்தார் என்ற கேள்விக்கான விடைகள் இன்றை வரை அறியமுடியா வியப்பாக இருக்கின்றமையே அதற்கான முக்கிய காரணம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா - கமல்

Related posts

தூதரக ஊழியருக்கு பிணை வழங்கியதை வரவேற்றது சுவிஸ்

G. Pragas

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் 1187 முறைப்பாடுகள்

reka sivalingam

மிருசுவில் படுகொலையாளி விடுதலை; அமெரிக்கா கடும் கண்டனம்!

Bavan