கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சிரமம் பாராது வாக்குரிமையை பயன்படுத்துங்கள் – மட்டு. ஆயர்

எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் மக்கள் அனைவரும் நேரமொதுக்கி தமது ஜனநாயக உரிமையான வாக்களிப்பில் ஈடுபட வேண்டுமென மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நான் அரசியல் சார்பற்றவன். எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவன். அரசியலுக்குப்பால் எல்லா மதங்களுக்கும் பொதுவாகவே சேவை புரிந்து வருகின்றேன். வாக்களிப்பது மனித உரிமை. அது எமது கடமையுமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் சிரமம் காரணமாக வாக்களிப்பதில்லை. பலரது வாக்குகள் நிராகரிக்கப்படுபவையாக ஆக்கப்படுகின்றது. இவற்றை நன்றாகக் கவனித்து வாக்களிக்க வேண்டும்.

நன்றாக சிந்தித்து பொருத்தமானவர்களை நீங்களே தெரிவு செய்ய வேண்டும். எவ்வளவு கஸ்டமான வேலைகள் இருந்தாலும் நீங்கள் அனைவரும் கட்டாயம் நேரமொதுக்கி வாக்களிக்க வேண்டும்.” – என்றார்.

Related posts

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரமுயர்ந்தது

G. Pragas

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

Tharani

தேங்காய்க்கான நிர்ணய விலை?

Tharani