செய்திகள் பிரதான செய்தி

சிறந்த விவசாயிகள் தெரிவு – 2019: நீங்களும் விண்ணப்பிக்கலாம்

சிறந்த விவசாயிகளாக தெரிவாகும் வாய்ப்பபை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அ.அ.சகிலாபானு தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பு வருமாறு,

வட மாகாண சபையின் விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல் நீர்ப்பாசனம் மற்றம் சுற்றாடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழும் விவசாயத் திணைக்களத்தின் மீண்டுவரும் செலவீன நிதி ஒதுக்கீட்டின் கீழும்,

  1. சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளர்.
  2. சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்.
  3. சிறந்த விவசாய முறைமையுடையான மரக்கறி செய்கையாளர்.
  4. காலநிலை மாற்றத்திற்கேற்ப சிறந்த முறையில் பயிர்ச்செய்கை மேற்கொள்பவர்.

ஆகிய தலைப்புகளின் கீழ் விவசாயிகளை தெரிவு செய்து கௌரவிக்கப்படவுள்ளனர். அதன் முதல் கட்டமாக விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாக மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இரண்டாம் கட்டமாக மாவட்ட மட்டத்தில் மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் விவசாயிகளுக்கு பணப்பரிசில், வெற்றிக்கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்படவுள்ளது.

இப்போட்டியில் பங்கு கொள்ளவிரும்பும் போட்டியாளர்கள் உங்கள் பகுதியுள்ள விவசாயப் போதனாசிரியர் காரியாலயத்திலும் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம், வவுனியாவிலும் போட்டிக்கான விதிமுறைகளை அறிந்து கொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்;ட விண்ணப்பப்படிவங்களை 2019 ஜப்பசி மாதம் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விவசாயப் போதனாசிரியரிடம் கையளிக்க வேண்டும்.

மாவட்ட மட்ட வெற்றியாளர்களுக்கு உழவர் பெருவிழாவில் வைத்து கௌரவம் வழங்கப்பட்டு பணப்பரிசில், வெற்றிக்கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்படவுள்ளது.

Related posts

கூட்டமைப்மைச் சந்திக்கிறது சஜித் குழு

G. Pragas

எதிர்வரும் தேர்தலில் முகாம்களிலும் வாக்களிப்பு நிலையங்கள்?

reka sivalingam

கொழும்பில் சட்டவிரோத கடைகளை அகற்ற நடவடிக்கை

reka sivalingam